அங்கே சின்ன கண்கள்
உன்மீது படிந்துள்ளன.
அவை அல்லும் பகலும்
உன்னைப் பார்த்துக் கொண்டுள்ளன.
அங்கே சின்ன காதுகள்
உன் ஒவ்வொரு சொல்லையும்
அவை உடனே எடுத்துக்கொள்கின்றன.
அங்கே சின்ன கைகள்
உன் எந்தச் செயலையும்
அவைதானும் செய்ய
ஆவல் கொள்கின்றன.
மேலும் அந்தக் குட்டிக் குழந்தை
உன்னைப் போல் வாழும் நாளை
கனவு கண்டுக் காத்திருக்கிறது.
நீதான் அந்தக் குட்டிக்
குழந்தையின் முன்மாதிரி,
நீதான் அவளுக்கு
அறிவில் சிறந்த அறிவாளி,
அந்தச் சின்ன அறிவுக்கு
உன்னைப்பற்றி எப்பொழுதும்
எந்தச் சந்தேகமும் எழுவதில்லை.
அவள் ஒரு மனதாக
உன்னை நம்புகிறாள்.
உன் அனைத்துச்
சொல்லையும் செயலையும்
அவள் எடுத்துக் கொள்கிறாள்.
அவள் உன்னைப் போல்
வளர்ந்தபின் உன்வழியிலேயே
அவள் சொல்லும் செயலும் அமையும்.
அங்கே அகன்ற
கண்களுடைய அந்தக் குட்டிக்
குழந்தை நீ எப்பொழுதும்
நியாயமானவள் என்று நம்புகிறாள்.
அவளுடைய கண்கள்
எப்பொழுதும் திறந்திருக்கின்றன.
அவள் பகலும் இரவும்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
ஒவ்வொரு நாளும்
உன் அனைத்துச் செயல்களிலும்
அவளுக்கு ஒரு முன்மாதிரியை
நீ அமைத்துக் கொண்டிருக்கிறாய்.
அந்தக் குட்டிக் குழந்தை
காத்துக் கொண்டிருக்கிறது
வளர்ந்து உன்னைப்போல்
வாழும் நாளுக்காக !
(குறிப்பு: சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் பிள்ளை பிறந்தபோது, கவிஞர் தன் மனைவிக்கு எழுதி அனுப்பிய கவிதை)

0 Comments