அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டு கண்கள் கண்ணீரில் மிதக்க வரதன் நின்று கொண்டிருந்தான். அவன் மனைவியைப் பிரசவத்திற்காக அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்தாள். அவளுக்கு பிரசவம் கொஞ்சம் சிக்கல் என்று மருத்துவர் கூறிவிட்டார். மிக நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்து இப்போதுதான் இறைவன் அருளால் ஒரு குழந்தை உருவாகி இருந்தது. வயிற்றில் வளர்ந்த குழந்தை மீது மனைவி ஸ்நேகா மிகவும் உயிராக இருந்தாள்.
இந்தச்சமயத்தில் பிரசவம் ஒரு சிக்கல் என்று ஆனதும் வரதன் மிகவும் கவலையடைந்தான். அப்போது மருத்துவர் பிரசவ அறையிலிருந்து கைகளைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார். ஐயா குழந்தைப் பிறந்து விட்டதா என்று ஆவலோடு கேட்டான் வரதன். ஆனால் டாக்டர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போனான். டாக்டர். குழந்தைப் பிறந்து இறந்து விட்டாகக் கூறினார். ஆனால் இந்த விஷயம் ஸ்நேகாவுக்கு தெரிவிக்கவில்லை என்றார். மேலும் நீதான் உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். நான் உடலளவில் மருத்துவம் பார்க்கிறேன். அவள் உள்ளத்தளவில் அந்தக் குழந்தைதான் உயிர் என்று இருக்கிறாள். அவளை எப்படியாவது நீ தான் காப்பாற்ற வேண்டும் என்றுச் சொல்லிவிட்டு உள்ளேப் போய்விட்டார்.
அப்போது வரதன் உள்ளேச் சென்றுப் பார்த்தான். அவன் மனைவி கைகளால் குழந்தையைத் துழாவிக் கொண்டு இருந்தாள். அப்போது வரதன் ஸ்நேகாவிடம் அம்மா ஸ்நேகா என்னைக் காப்பாற்று ஸ்நேகா இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்றுக் கூற என்ன ஆச்சு உங்களுக்கு என்றுக் கேட்டாள் ஸ்நேகா.ஒன்றும் இல்லை நான் இப்போது எனக்கு அம்மா இல்லையே அம்மா பாசமும் தெரியாது நான் தனியாக வளர்ந்தவன் நீதான். எனக்குத் தாய் போல இப்போது எனக்கு நீ இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்னை வாழ வைப்பதும் வாழ வைக்காததும் உன் கையில் தான் இருக்கிறது ஸ்நேகா என்றுக் குழந்தைப் போல் தோலின்மேல் சாய்ந்து அழுதான். அவள் நான் இருக்கிறேன் மூத்த பிள்ளையே நீங்கதான் நீங்க அழாதீங்க உங்கள நான் பார்த்துக்கிறேன் நான் உங்களுக்கு அம்மா மாதிரி தான் என்று அவள் கூறியதும் அவன் மனம் துணிந்து குழந்தை இறந்ததைக் கூறினான். அவள் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நான் அம்மாவாக. இருப்பேன் நமக்கு ஒரு குழந்தைப் பிறகுப் பிறக்கட்டும் என்று கூறினாள்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இறைவனை வாழ்த்தினான்.
0 Comments