மழை தரும் மரங்களை வெட்டிவிட்டார்கள் போன்சாய் எனச்சொல்லி மரங்களைச் செடியென மாற்றிவிட்டார்கள்
காடழித்து வீடுகட்ட கலர்கலராய் கற்கள் நட்டு வைத்தார்கள் நவீனமெனச் சொல்லிச் சொல்லி எதைத்தான் விட்டு வைத்தார்கள்
ஆற்று மணலையெல்லாம் ஆசைதீரக் கொள்ளையிட்டார்கள் ஆழ்துளைக் கிணறு வெட்டி பூமித் தாயின் குருதி குடித்தார்கள்
இயற்கையின் கைப் பிடித்து நடக்க மறந்தார்கள் நாகரிகம் என்ற பெயரில் நற்றமிழ் மரபை உடைத்தார்கள்
சூழலைப் பேணி நின்றால் சாவை வெல்லலாம் இல்லை நான் தான் எல்லாமுமென்றால் இயற்கை உன்னைக் காவு கொள்ளலாம்.

0 Comments