Nagore Puranam
வழி அறியாமல் தொலைத்தேன் | கவிஞர் அன்பன் | November 2023

வழி அறியாமல் தொலைத்தேன் | கவிஞர் அன்பன் | November 2023

என்னை சுற்றி ஓராயிரம் பேர் வட்டமிட்டாலும், கண்கள் தேடுவது உன்னைத் தான் சிரித்து கதைக்க சுவாரசியம் பிறந்தாலும் அதை சாய்ந்து கேட்க உன் தோள்களை தேடுகிறேன்!!

நடக்கையிலும் உன் நியாபகம்,              கண் சிமிட்டலிலும் ஒரு நாடகம் நீ தொலைவில் இருப்பதை அறியும் உள்ளம், சட்டென்று பதறுகிறது,            எங்கு தொலைத்துவிடுவேனோ என்று..!!

விழி பார்க்காமல் ஒரு பாசம்,                    கை கோர்க்காமல் ஒரு நேசம்! வழி அறியாமல் தொலைத்து விட்டேன் என்னை அல்ல, என் தன்மானத்தை...!!

தேடல் நீயாக இருக்க, தொலைப்பது எதுவாக இருப்பினும் சரியே! தேயும் நிலவை பார், தேம்பி அழும் வானத்தை பார்.. தேடலின் உண்மை புரியும்..!!

நித்தமும் உன்னை நினைத்து          ஆனேன் நோயாளியாக வருவாயா? நோவினை தீர்க்க மனநல மருத்துவராக!!!

- கவிஞர் அன்பன்

Published in Nagore Puranam November month magazine 2023

Post a Comment

0 Comments