மழை வரும் என்பது போல மேகமூட்டங்கள் காட்சி அளிக்கின்றன!
ஆனால் சிறிதும் மழை பெய்யவில்லை!
அலைபேசியில் நீ என்னை அழைப்பாய் என காத்திருந்து ஏமாறுவது போல!
அலைபேசியில் உன் ஒற்றைக் குருஞ்செய்திக்காக ஏங்கித் தவித்து ஏமாறுவது போல!
உன் மெல்லிய இசையைக் கேட்கப்பெறாமல் வாடுவது போல!
பக்கமிருந்தும் எட்டாக்கனியைப் போல!
நீ என்னை நினைத்துக் கொண்டு இருப்பாய் என்று என்னை நானே ஏமாற்றுவது போல!
விழி நீருக்கு பதில் உன் புன்னகை பூத்த முகம் அது போதும் இக்கணம்!

0 Comments