தேர்வுக்கு படிக்கும் ஆர்வலராக இருப்பது மிகக்கடினம்.

உறவுகள் தங்கள் கேள்வித் துப்பாக்கியால் உங்களைக் கொன்றுவிடுவார்கள்.

உன் கல்யாணம் எப்போது உன் கடன்களை எப்படி அடைப்பாய்,

வேலையில்லாமல் இருப்பதற்காக உங்களை வறுத்தெடுப்பார்கள்.

அவர்கள் உங்களை யாரோ போல் நடத்துவார்கள் மனிதனாக கூட மதிப்பார் யாருமில்லை.

பரீட்சைக்குத் தயாராவதே பெரிய சவால் உங்கள் மனநலம் சரியாக இருக்காது.

உங்களின் கல்வித் தகுதி என்னவாயினும் செயலற்று உறங்குவதாக இருக்கும் உங்கள் இலக்குகளை அடையும் வரை.

உங்கள் வாழ்க்கை பூஜ்ஜியத்தில் இருக்கும், ஆனால் நீங்கள் உங்களை ஹீரோவாக கற்பனை செய்தீர்கள்.

வேலையில்லாமல் இருப்பதற்காக உலகம் முழுவதும் உங்களைப் பார்த்து இரக்கமின்றி ஏளனமாய் உச்சிகொட்டி சிரிக்கிறது.

முழு உலகமும் மட்டுமல்ல உங்கள் நெருங்கியவர்கள் கூட உங்களை விட்டுப்போகலாம்.

காதல் செய்பவராயினும் காதலியும் பிரிவாள், அவர்கள் போனால் போகட்டும்

அந்த நேரத்தில் நீங்கள் மற்றவர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவீர்கள் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்

உங்கள் நண்பர்கள் திருமண வாழ்வில் ஜொலிப்பார்கள் சிலர் வணிகத்தில் மேலிடத்தில் திகழ்வார்கள்

வாய் விட்டு அழ தோன்றும், உன் சோகங்களை கேட்பார் யாருமில்லை

இவை அனைத்தும் உனக்கு வழிகாட்டியாக இருக்கும் நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது

இத்தனை அசௌகரியங்களுக்குள்ளும் உன்னுடைய ஆட்சியர் கனவு வெகு தூரத்தில் தெரியும்

துணிவு கொள், வெகுண்டெழு, தினம் பயிற்சி செய், தினம் உன் கனவை நினை

நீயே உன்னை உறுமாற்றிக்கொண்டு தேர்வில் வெற்றி பெற்று கர்ஜிப்பாய் அன்று தான் உன்னுடைய நாள்.

உன்னைப் பலித்து சபித்தவர்கள் உன்னைப் போற்றிப் புகழ்வர்.

நீங்கள் உங்களை உருவாக்க வேண்டிய தருணம் அது, அதுவே உங்கள் வாழ்வின் வெற்றி.

தன்னம்பிக்கை இழக்காமல் தாயன்பை மறவாது வாழக்கற்றுக்கொள்.

- ஈரோடு முகம்மது இக்ரம். ஜா.

Published in Nagore Puranam October month magazine 2023