1. வெற்றியின் இரகசியம்
உன் உழைப்பிற்கு தடையானதை உடை, அதுவே உன் வெற்றிக்கு விடை உன் வெற்றிநிலையை நீ அடை, இனிமேல் உனக்கில்லை தடை
2. ஒலிக்கடிகைக்கு ஓய்வு
நினைவூட்ட ஒலிக்கடிகை கூட அவசியமில்லை அம்மாவின் அன்புகுரல் உள்ளவரை
3. நிழலும் நிஜமும்
உன்னைப் பிரிந்து ஓடுபவள் மட்டும் பெண்ணல்ல, உன்னைப் பிரிந்து வாடுபவளும்
4. கைம்மாறாகும் மனித உயிர்
தீக்கனல் உள்ளவரை உச்சரிக்கும் உணர்வுகள் அணைந்ததும் அனைத்தும் வெறுமையே
5. அன்பின் அணிகலனான அந்தச் சொல்
'அ'வில் அல்ல அகராதியிலேயே சிறந்த சொல் அம்மா
6. பிள்ளைகளும் பிழைகளே
கையேந்தி படிக்க வைக்கும் பாசமலர்களை பிற்காலத்தில் கையேந்த விட்டால் பிள்ளைகள் நம் பிழைகளே
7. நிறைவும் நிம்மதியும் ஒருங்கே
சொர்க்கத்திற்கே சென்றாலும் சொந்த ஊர் செல்வது தனி சுகம்.

0 Comments