1. தகுதி
உன் தகுதியைத் தீர்மானிப்பது ஆண்டவனும் அடுத்தவனும் அல்ல உன் உழைப்பும் நேரமும் தான்.
2. நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள்
எந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள், உடலால் மட்டுமல்ல மனதாலும் தான்.
3. ஏற்க மறுக்கும் எதார்த்தம்
நேரான பாதைகளும், நேரான மரங்களும், நேரான மனிதர்களும், இனி பார்ப்பது அரிது.
4. எனது பார்வையில் சோம்பேறி
வேலை செய்யாமல் இருப்பவர்களையும், வேலை செய்பவர்களைத் தடுப்பவர்களையும் நான் சோம்பேறி என்றுதான் சொல்லுவேன்.
5. மதிப்பு
நம் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நாம் தான், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அல்ல.
- அன்பில் கண்ணன்
Published in Nagore Puranam March month magazine 2025

0 Comments