வானம்

வாசிக்கும்

வரிகள்...

பூக்கள்

நேசிக்கும்

புன்னகை...

விளைநிலம்

பெறும்

விருதுகள்...

விவசாயி

எதிர்பார்க்கும்

விருந்தாளி...

வனங்கள்

செழிக்க

வான்மடல்...

ஓடைகள்

இசைக்கும்

புல்லாங்குழல்...

பயிர்கள்

சுவாசிக்கும்

மூச்சு காற்று...

பூமியின்

உயிர்களுக்கு

புத்துணர்ச்சி...

மழைத்துளி

நிலம் சேமிக்கும்

உயிர்த்துளி!!! 

- வடகரை கவிஞர் வாஹிதி ஃபரீது முஹம்மது ஒலி

Published in Nagore Puranam September month magazine 2025