வளையல் வாங்கித் தந்ததில்லை.
புடவை வாங்கித்தர வக்கில்லை.
நடவு நட்டக் காசில்
நன்றாகப் படிக்கவுமில்லை.
அக்காள் தங்கையைக் கரையேற்றவில்லை
ஒரு வேளை சோறு போட்டதில்லை.
வெட்டி மயிராய் மழித்த கவிதைகளை
அம்மாவுக்கு அர்ப்பணிக்க மனமில்லாமல்
கிழித்தெறிந்தேன்.
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam September month magazine 2025

0 Comments