Nagore Puranam
இறையவனின் அருளே வேண்டி | September 2025 | கவிப்பேரொளி செ. அப்துல் லத்தீப்

இறையவனின் அருளே வேண்டி | September 2025 | கவிப்பேரொளி செ. அப்துல் லத்தீப்

 

தொழுகையும் பிரார்த்தனையும் தொடர்ந்திருக்கும் 

தோளில் அது இன்பத்தைத் தூக்கிவைக்கும்

 விழுவதும் எழுவதும் வாழ்க்கை என்றால் 

விழுந்தாலும் வெற்றியே நிறைத்து வைக்கும் 

அழுகையும் கண்ணீரும் அடுத்து வந்தால் 

அடியவனின் மனமெல்லாம் தூய்மையாகும் 

எழுவது மனத்துள்ளே இம்மை தாண்டி 

என்றைக்கும் இறையவனின் அருளே வேண்டி!


வேண்டியே மனமொன்றி இருகை ஏந்தி

விழித்திருந்து இரவினிலும் அருளை மாந்தி 

தூண்டிய அருளுணர்வு தொய்வே இன்றி 

தொழுதாலே வாழ்க்கை ஒளி தொடரும் ஒன்றி 

ஆண்டியோ அரசனோ பேதமில்லை 

அன்பிருக்கும் அளவொன்றே குறியீட்டெல்லை 

தோண்டிய ஊற்றுநீர் ஊறுதல் போல்

தொல்லையுறும் காலத்தும் அருள் சுரக்கும்.


சுரக்கும் அருள் இறைகருணை 

உலகைக் காக்கும் சுற்றமுடன்

 நட்பொன்றி வாழவைக்கும் 

மறக்கவே முடியாத அனுபவங்கள்

மனத்துள்ளே புதுமைஒளி

 வருங்கணங்கள் சிறக்கவே

 வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும்

 சிந்தனையில் இறைவன்புகழ் 

நிலைத்து நிற்கும் இறக்கவே 

இறைவனே அழைக்கும்போது

 இனிமைசுகம் மறுமைவசம்

 இணையும் அன்றோ?


அன்றுயெனும் தீர்ப்பு நாள் 

அழகாய் மாறும் அருநிழலில்

 இளைப்பாறும் வாய்ப்பு சேரும்

 வென்றுபல சோதனைகள்

 தாண்டிச்சென்று வெற்றியுடன்

 சொர்க்கம் புகும் அருளும் கூடும்

 நன்றுஎனப்பாராட்டும் கனிவர்க் 

கங்கள் நல்லதுணை அருகிருக்கந்திகள்

 பாயும் கன்றைத்தாய் பசுகாத்தல்போலே

 அங்கே கருத்தான தொழுகையே

 சிறப்பாய்க் காக்கும்!


காக்கும்தன்கருணைதனை

 இறைவன்தந்து கற்பனைக்கும்

 எட்டாத சொர்க்கம் தந்து 

ஆக்குவான் தூயநல் அடியானாக

அந்தசொர்க்க வாழ்வென்றும்

 நிலைத்திருக்கும் நாக்கும் தன்பணியான

 இறைவன் நாமம் நாளுமே மறக்காமல்

 சொல்லி நிற்கும் போக்கிடும்

 பொழுதெல்லாம் தொழுகை என்று

 பொருள் உணர்ந்தால் இன்பமே

 நிலைத்திருக்கும்!

கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப்.

Published in Nagore Puranam September month magazine 2025

Post a Comment

0 Comments