கல் | September 2025 | கவிஞர் சூ. சிவராமன்

 


முயற்சிகள் முட்டி மோதுந் தோறும்

முழுமையாய் வாழ்வும் மாறும்

தன்னிலை மறந்தும் உழை

நன்னிலை வாய்த்தே தீரும்

முன்னிலை பெறவா வேண்டும்

இன்னிலை மாற்றிட முயல்வாய் எனில்

எந்நாளும் வாழ்த்திடும் ஊரும்.


முயற்சி சிறு தீப்பெட்டி

உழைப்பு பெரும் தீப்பந்தம்

தடைக்கற்கள் நூறு வரும்

தாண்டிப் போனால் வெற்றி தரும்

விழுந்தவனே எழுந்து நிற்பான்

அவனியெல்லாம் பெயர் பொறிப்பான்


கல்வியது மனத்தைத் தைக்கும்

அறிவுக்கண் திறந்து வைக்கும்

பொய்யறிவு புழுகுவோர்க்கு

மெய்யறிவுப் பால் புகட்டும்

நுண்ணறிவும் நுழைய வாய்க்கும்

கல்வியறிவு கண் போன்றது

அனுபவ அறிவு மண் போன்றது

கல்விப் பாடம் கவனமாய் கற்று

அனுபவத்தால் அறிவுச் சுடர் ஏற்று

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam September month magazine 2025


Post a Comment

0 Comments