அன்வரின் துளிகள் - 02 | February 2024 | அன்வர் சாஹிப்


வார்த்தையினிலே வாழ்க்கை

வாழும்வரை வார்த்தைகளை விட்டுவிடும் மறைந்து சென்றபின் மனமே பாரமாய்.

விண்ணும் விவசாயிக்கு தோழனே

கருமேகமும் கண்ணீர் சிந்தும் விவசாயிகளின் கண்ணீர் துடைக்க

யாரென்று கேட்க நாதியின்றி

ஏனோ நான் இருக்கிறேன் முதியோர் இல்லத்தில் என்றும் நீ இருக்கிறாய் என் அன்பு உள்ளத்தில்

அப்பா அழுகின்றார்

ஏங்கினேன் உன்னை கொஞ்சி விளையாட தேங்குகிறேன் அளவுமிஞ்சி உரையாட

தடைகளைத் தகர்த்திடும் தங்கமகள்

அவனுக்கு முன்னே அவள் அகரவரிசையில் மட்டுமல்ல தரவரிசையிலும்

அன்புக்கு யார் அடிமை?

இதயம் தேடும் இதயம் தள்ளிப் போக இதயம் வாடும் இதயம் தங்கிப் போக

தோல்வியும் தோழனே

உன்னைத் தோற்கடிக்க யாரும் இல்லை உன்னைத் தவிர

இறைவன் அழைக்கின்றான்

எல்லாம் தந்த இறைவன் நம்மை எதுவும் இல்லாமலேயே அழைக்கிறான்

- அன்வர் சாஹிப் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments