பாலை வனத்தை சோலை வனமாக்க வந்த நாளே!
புண்பட்ட நிலத்தை பண்பட்ட நிலமாக்க வந்த நாளே!
பாறைக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்க வந்த நாளே !
சாதி மத சாக்கடையை சாட்டையால் அடிக்க வந்த நாளே !
சாகாத தமிழ் அமுதை நமக்கு அளிக்க வந்த நாளே!
பாரில் உள்ள அனைவருக்கும் படியலக்க வந்த நாளே!
பைந்தமிழர் வாழ்வுதனை பறைசாற்ற வந்த நாளே!
பரணி பாட பாவலருக்கு பாட்டளிக்க வந்த நாளே! தரணி போற்றும் எங்கள் தமிழ் அன்னைத் திருநாளே!
- பூ. நல்ல பெருமாள்
Published in Nagore Puranam February month magazine 2024

0 Comments