பதவி | February 2024 | கவிஞர் சூ. சிவராமன்

 


வட்டத்தின் நடுவே ஒற்றை நாற்காலி

ஒளிவீசி அமர்ந்திருக்கிறது 

கைநீட்டிக் காத்திருக்கிறது 

எதிர்பார்ப்பு வெறுங்கை முழம் போடுகிறது 

கூப்பிய கரங்கள் 

கூழைக்கும்பிடு, வார்த்தைத் தோரணங்கள், 

கண்ணறியாப் பந்தலில் 

காய்த்துத் தொங்குகிறது அறம்.

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments