அதிகாரத்தில் ருசி கொண்ட நாக்கை
அடையாளங்காண விழைந்தேன்
அது உண்மைகளை விழுங்கி
ஏப்பமிட்டுக்கொண்டிருக்கிறது
பிரம்மாண்டப் புளுகு மூட்டைகளை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது
வெகுளிகளின் குரல்வளைக் குருதி
அதன் ருசி மொட்டுக்களில்
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam February month magazine 2024

0 Comments