தொலைநோக்கு சிந்தனை | February 2024 | பிரியதர்ஷினி மோகனவேல்

 


எத்தனை எத்தனை வளங்கள் இருந்தும் சோற்றுக்கு யாசிப்போர் பலர் இங்கிருக்க, நிலவில் வாழ்வின் தடம் தேடுகிறது.. தொலைநோக்கு சிந்தனை...!

மலம் அள்ளும் மனிதனின் இறப்பிற்கு இரங்கல் செய்தி பரப்ப, 5ஜி வேகத்தில் கண்டுபிடிக்கபடுகிற அலைபேசி-தொலைநோக்கு சிந்தனை...!

இரசாயன உரங்களால் மண்வளம் அழிய, தன்வளம் தேடி வீட்டுக்கு வீடு மாடித்தோட்டம்-தொலைநோக்கு சிந்தனை...!

ஏன் தினமும் இங்கு மாராத்தான் ஓட்டம்? பதில் வேண்டுகிறேன் நான்... மனித இனத்திடம்..! தொலைநோக்கு சிந்தனையில் மூழ்கி இருக்கும் என் மனித இனத்திடம்...!

மாற்றம் தேவைப்படும் அனைத்திற்கும் தொலைநோக்கு சிந்தனையால் பதில் கிடைக்குமேயானால், ஏன் இந்த மனித வாழ்வை வாழ இத்தனை போராட்டம்...?

பிரியதர்ஷினி மோகனவேல்

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments