" நயமேவு கஞ்ச முகமுங் கருணை நயனமுஞ்சீர்ப் பயமேவு செம்பொ னுறழ்மேனி யும்மெழிற் பாதுகைசேர் சயமேவு தாளுந் தலைவிரி கோலமுஞ் சார்ந்தன்பரி தயமேவு மென்றுங் குணங்குடி யானெனுஞ் சற்குருவே"
- (நான்மணிமாலை 18)
மேற்பாடப்பட்ட பாடலின் பொருளானது கரிய நிறமும், கமல முகமும், கருணையே வடிவான கண்களும், காலில் பாதுகையும், கலைந்து விரிந்த முடிசடையும், கக்கத்தில் கம்பளி ஆடையும் கொண்டு குணங்குடியார் காட்சியளித்தார் என, சரவணப்பெருமாளயர் பாடுகிறார்.
சுல்தான் அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1888 ஆம் வருடம் பிறந்தார். அதேசமயம் தாய் ஊரான குணங்குடியிலும் தந்தையின் ஊரான தொண்டியிலும் என்று குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள் உடன் மதுரையிலும் பிறந்து இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மதுரையில் வாழ்ந்த மின்னா நூருத்தீன் புலவர் இவரின் முப்பாட்டனார் என்பது அறியப்படும் கூடுதல் தகவல். தொண்டியார் சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அரபிலும் மிக்க தேர்ச்சி பெற்றவர். சுல்தான் அப்துல் காதர் என்ற பெற்றோர் இட்ட பெயர் இருப்பிலும் மக்கள் யாவரும் அவரை பற்பல பெயர்களால் அழைத்தனர். குணங்குடியார், தொண்டியார், மஸ்தான் சாகிபு, ஆரிபுபில்லா (இறைஞானி), ஒலியுல்லா (இறையன்பர்), மஸ்தான் சாமி என்றெல்லாம் இறை காதலர்களாலும் அன்னாரின் மீது அன்பு கொண்டவராலும் இன்றளவும் அழைத்து வருகின்றனர்.
'மஸ்த்' என்ற சொல்லுக்கு போதை,வெறி என்று பொருள்படும். இவர் இறைவன் மீது கொண்ட காதலால் இறை காதல் போதையில் வெறிபிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு என்று கவிக்கோ அப்துர் ரஹ்மான் குறிப்பிடுகிறார்.
குணங்குடியார் கால் மேலாக தலை கீழுமாக மரத்தில் தொங்கி தவம் மேற்கொள்வது வழக்கம். இறைவனிடம் நித்தி அடைவதற்கு இது ஒரு வகையான பயிற்சியாகும். அப்போது மக்கள் தந்த இடையூராக அமைந்த வண்ணம் சென்னை புறப்பட்டார். சென்னை வந்த மஸ்தான் சாகிப் பல அற்புதங்களையும் இறை வழி காதலையும் வெளிப்படுத்தினார். பின்னர் அதிகம் தற்போது மக்களால் அழைக்கப்படும் தொண்டியார் என பெயர் காரணம் பெற தண்டையார்பேட்டை பகுதியில் குடியேறினார்.
அதுவே மக்களால் தொண்டியார் என அழைக்க ஆயிற்று. தற்போது தொண்டியார்பேட்டை என்பது மருவி தண்டையார்பேட்டை என வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுதும் ஆங்கிலத்தில் TONDIYARPET என்றே இருந்து வருகிறது.
இவர்களின் தமிழ் தொண்டு சொல்லில் அடங்காது.
மஸ்தான் சாகிபின் படைப்புகள் :
குரு வணக்கம்
ஆநந்தப் பத்து
முகியித்தீன் ஆண்டவர் கொச்சகம்
அகத்தீசன் சதகம்
மகமூது நபியாண்டவரைச்
சுகானுபவமுறத் துதித்தல்
தவமேபெற வேண்டுமெனல்
குறையிரங்கி உரைத்தல்
தவராஜ மகிமை சாற்றல்
வானருள் பெற்றோர்
மனநிலை உரைத்தல்
ஆனந்தக் களிப்பு
நிராமயக் கண்ணி
பராபரக் கண்ணி
றகுமான் கண்ணி
எக்காலக் கண்ணி
கண்மணிமாலைக் கண்ணி
மனோன்மணிக் கண்ணி
நந்தீஸ்வரக் கண்ணி
கீர்த்தனைகள்
ஆனந்தக் களிப்பு
என்பன மொத்தம் ஆயிரத்தி எழுபத்தி ஒன்பது பாடல்கள் பாடியுள்ளார்.
இனிமை வாயந்த குணங்குடியாரின் பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல படி நிலைகளில் சிறந்து விளங்குகிறது. பகுப்புமுறை, சொல்லாட்சி, கற்பனை, மரபுத் தொடர், வழக்கு தொடர், சொல்லடுக்குத் தொடர், உணர்ச்சித் தொடர், வினாத் தொடர், பழமொழி, உவமை நயம், யாப்பு ஆளுமை, சந்த நயம், இசை நுட்பம், பிற இலக்கிய ஆளுமை என யாவற்றினும் சிறந்து விளங்கி தன்னுடைய படைப்புகளை பறைசாற்றுகிறார். தொண்டியார் மீது பாடப்பட்ட புகழ் மாலைகள் முன்னூற்றி தொன்னூற்றி ஐந்து ஆகும்.
குணங்குடியார் கூற்றின்படி "தாய் இருக்கப் பிள்ளை தளராது ஒருபோதும், நீ இருக்க நான் தளர நேரோ நிராமயமே " என்றவாறு இறைவனை போற்றி புகழ்வோம்.
- நாகூர் செய்து அப்துல் காதிர்
Published in Nagore Puranam February month magazine 2024


0 Comments