சமூகம் | March 2024 | பிரியதர்ஷினி மோகனவேல்

இன்றைய நாளில் பெரிதும் அர்த்தமற்று போன ஒரு சொல்..!

 செய்தித்தாள் இன்று குற்றப்பத்திரிகையாய் மாறிப்போனது, இங்கே!

காதலை ஏற்க மறுத்தவளை, எமனுக்கு இரையாக்கும் உரிமையை யார் கொடுத்தது. காதலின் புனிதத்தை உணராத மிருகங்களுக்கு..?

உயிரை விட குடியை நேசிக்கும் மனிதன் என பெயர் கொண்டோர் பலர், இங்கே..!

கடவுளின் பெயர் சொல்லி தன்னை சுகமாக்கிக்கொள்ளும் உணர்வற்றோர்.. பலர், இங்கே...!

பாலியல் பற்றி பாடம் நடத்துபவனே.. இன்று பாலியல்தொல்லை தருபவனாய்..!

இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் எனில்.. ஏன் இத்தகைய கேவலமான மனிதபிறவியை உயிருடன் வைத்திருக்கிறான்...?

குற்றங்கள் மட்டுமே பெருகும் இவ்வுலகில்.. வாழவே தகுதியற்றவராய் மாறிப்போகும் சில நல்உள்ளங்கள்., உயிரற்றுப் போய்..!

கேள்விகள் ஆயிரம் கொண்டு நான் இங்கு காத்திருக்க... பதில் உரைக்க எவரும் இல்லை.. இச்சமூகத்தில்..!

- பிரியதர்ஷினி மோகனவேல்

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments