Nagore Puranam
தொடர்பு எல்லைக்கு வெளியே | October 2025 | கவிஞர் சூ. சிவராமன்

தொடர்பு எல்லைக்கு வெளியே | October 2025 | கவிஞர் சூ. சிவராமன்


நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் 

தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்…

காளைகளின் கழுத்து இறுக்கிய நுகத்தடி கயிற்றில்

அழகிய சுருக்கொன்றை போடக் கற்றுத் தேர்ந்தான்

நிலத்தின் நிர்வாணம் சகிக்கவில்லை

விழிகள் நிலைகுத்தியிருக்க

நாக்குத்துருத்தி நிமிர்ந்த பால் கதிரென

அந்தரத்தில் தொங்குகிறான்

பாரந்தாளாமல் உச்சிக்கொம்பு வளைந்திருக்கிறது

சட்டைப் பையிலிருந்து கைபேசி ஒலித்தபடியேயிருக்கிறது

ஓயாமல் அழைத்தபடி இருக்கிறார் வங்கி மேலாளர்.

கவிஞர் சூ. சிவராமன்

Published in Nagore Puranam October month magazine 2025

Post a Comment

0 Comments