Nagore Puranam
என் தலை தீபாவளி | October 2025 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

என் தலை தீபாவளி | October 2025 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


இந்திய அஞ்சல் துறையில் எழுத்தராக தேர்வாகி 27/01/1965 ல் கடலூர்த் தலைமை அஞ்சலகத்தில் பயில்பவராக Learner பணியில் சேர்ந்தேன் மாத உதவி தொகை ரூபாய் ஐம்பது மட்டும் ஊழியர்களின் மாத ஊதியத்தில் பாதியிலும் குறைவாகக் கொடுத்து முழு எழுத்தர் வேலையை முழுதாக பெற்றது.

22.3.1965ல் திருச்சிராப்பள்ளித் தலைமை அஞ்சலகத்தில் முழுமையான பயிற்சி வகுப்பு துவங்கியது பயிற்சியின் பொழுது மாத உதவித் தொகை ரூபாய் தொன்னூறு மட்டும்.

5.6.1965 ல் பயிற்சி முடித்து கடலூர் தலைமை அஞ்சலகத்தில் எழுத்தர்ப் பொறுப்பு ஏற்றேன் ஊதியம் அகவிலைப்படி வீட்டு வாடகைப் படி சேர்ந்து ரூபாய் 162 மாத ஊதியம்.

கடலூர் நேப்பியர் சாலையில் மூன்று தளங்கள் உள்ள ஒவ்வொரு தளத்திலும் 12 அறைகள் அமைந்த மூன்று தளங்களிலும் 36 அறைகளை உடைய ஒரு தங்கும் விடுதியில் நானும் என்னுடன் பணி புரிந்த சீர்காழிகாரர் கோ. ஜெகநாதனும் முதல் தளத்தில் மத்தியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தோம்.

மாத வாடகை ஐம்பது ரூபாய் இருவரும் பகிர்ந்து கொண்டோம்.

பெட்டிப் படுக்கைகளை வைத்துக் கொண்டு இருவரும் படுக்கும் அளவு உள்ள அறை என் நண்பன் உயரமானவர் கால் நீட்டிப் படுக்க சிரமப்படுவார்.

கீழ்த்தளத்தில் மட்டுமே கழிவு குளியல் அறைகள் மொத்தம் அந்த விடுதியில் தங்கி இருந்தவர்கள் 72 எழுபத்தியிரண்டு பேரும் அலுவலக பணியாளர்கள் காலை ஐந்து மணிமுதல் ஒன்பது மணி வரையிலும் வரிசையில் நின்று காலைக் கடன்களை முடிக்க வேண்டும் .

அந்த ஆண்டு அக்டோபர் 23,ல் தீபாவளி அஞ்சலகத்தில் அந்த காலத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன் விடுமுறை நாள்களிலும் அஞ்சலகத்தில் சாதாரண தபால்கள் பட்டுவாடா செய்யப்படும் . அதற்குரிய பணி வரிசை Turn system முறையில் வரும் தீபாவளியில் இந்து சமயத்தினருக்கு விலக்கு அளித்து பிற சமயத்தினருக்கு பணி கொடுப்பர் ஆனால் தபால்காரர்களுக்கு அனைத்து விடுமுறைகளிலும் வேலை உண்டு மேலும் தபால்காரர்களுக்கு Allowance கொடுப்பர். 1965 தீபாவளி நாள் பணிக்கு நானும் கடலூர் அஞ்சலக மூத்த கிறித்துவ எழுத்தரும் பொறுப்பதிகாரி .

22ஆம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் எங்கள் விடுதியில் இருந்த அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்று விட்டனர்.

விடுதி காவலர் இரவு பத்து மணிக்கு வாயில் கதவு சாவியைக் கொடுத்து உள்ளே பூட்டு போட்டு பூட்டிக்கொள்ளவும் காலையில் பணிக்குச் செல்லும் பொழுது வெளியில் பூட்டி செல்ல கட்டளையிட்டு சென்றுவிட்டார்.

காவலாளியைச் சேர்த்து 73 பேர் இருக்கும் அந்த விடுதியில் இரவில் ஒரேயொரு ஆளாக இருந்தேன் ஒரு வாளியில் நீரைப் பிடித்து ஒருமுறையேனும் எடுத்து சென்று முதல் தளத்தில் வைத்துக் கொண்டேன்.

வேலையில் சேர்ந்து முதல் தலை தீபாவளி எனக்கு 22 வயது தனித்தனியாகவும் அச்சம் கடும் மழை மின் துண்டிப்பு நல்ல நாள்கள் விழாக்கள் நடக்கும் பொழுது மின்சாரத்தைத் துண்டித்து மின்துறை மக்களைத் துன்புறுத்துவதால்தான் வருண பகவான் வர்ணிக்க மறுக்கிறரோ? மழையாய் பொழிந்து நாடு செழிக்க வைக்க தயங்குகிறாரோ? என்று எண்ணினேன்.

அந்த எண்ணம் இன்றும் மாறவில்லை செயற்கை நுண்ணறிவில் நுழைந்து உலகில் அதி நவீன வியக்கும் விந்தைகள் நடக்கும் இந்த காலத்திலும் மழை பொழிந் தால் மின்தடை நடைமுறையில் உள்ளது வேடிக்கையா? வேதனையா? 

தீபாவளி முடிந்த இரவு மூவர் விடுதிக்குத் திரும்பினர். அதில் ஒருவர் என் அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சக்கரவர்த்தி.

தனித்திருந்தே தலை தீபாவளி அச்சம் நீங்கி அகம் மகிழ்ந்தேன்.

கவிஞர் மு. அபுல் அமீன் 

Published in Nagore Puranam October month magazine 2025

Post a Comment

0 Comments