அவனுடைய பெயர் ஆனந்த். ஒரு நாள் எப்போதும் போல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். பகல் நேரம் தான், தெரு விளக்கு விட்டு விட்டு அடித்துக் கொண்டிருந்தது.
அந்த விளக்கை நிமிர்ந்து பார்த்தான். அந்நேரம் அவன் மனம் காலியாக இருந்தது. பிறகு தன் முன்னே பார்த்தான். ஒரு அழகிய அங்கம் உடைய பெண் ஒருத்தி இவனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அதே இடத்தில் அசையாது நின்றான் ஆனந்த்.
தொலைவில் கண்டவளை அருகே வரக் கண்டான். பசுமையான புல்வெளியில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இவன் மனதில் சிறகடித்தன ...
இன்னும் நெருக்கமாக வர அவள் கண்கள் தொடாமலே அவனை வசீகரமாகிவிட்டது. ஆயிரம் பேசுபவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. பேரழகில் மயங்கி நின்றான்.
அவன் கண்களில் அவளது நிழல் படிந்தது.
தன் இமைகளையும் இமைக்க வெறுத்தான். அங்கு விழுந்தவன் தான் இன்னும் எழவில்லை.
அவளோ மேகங்களைப் போல் கடந்து சென்று விட்டாள்.
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னைத் தொலைத்துவிட்டு தொலைந்தவளை...
காதலில் தேடல் கூட ஒரு சுகம் தானே...
- ம. முஹம்மது உஸ்மான்
Published in Nagore Puranam October month magazine 2025

0 Comments