இலக்கணமாய் எதிர் நின்று
எமையாலும் இறைத்தூதரே
இதழ்கொண்டு துதித்தாலும்
இமை கொண்டு மதித்தாலும்
இணை இல்லா நபி நாதரே
இரு கரம் நீட்டி உன்னை சேர
இசைக்கின்றேன் இக்கவிதனை.
இறை அருள் பெற்று இறைவேதம் தந்தீர்
இணை இல்லா உலகிற்கு இன்ப வழி தந்தீர்
இரவெல்லாம் இமைக் காத்து இவ்வழி தந்தீர்
இதழ் ஓரம் பொங்கி வரும் உன் கலிமா தானே
இடைவிடா நேசம் வைத்தே இறைஞ்சுகிறேன்
இப்புவியில் அடங்கு முன்னே ஆதரிப்பாய் எனையும்.
இணையில்லா நேசத்தால் இசைக்கின்றேன்
நாளும் உன் வேதம் இடைத்தலர்ந்தாலும்
இமை மூடினாலும் இதழ் பிரிந்தாலும்
இணை வைக்க மாட்டேன் இனி என்னாலும் நானே.
- கவிஞர் தி. சுப்ரமணியன்
Published in Nagore Puranam October month magazine 2025

0 Comments