இது தான் தாய் பாசமா | October 2025 | பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்

 


கருவேலங்காட்டுக்குள்ள 

கட்ட வெட்ட போன மகன் 

பொழுது சாயும் நேரமாச்சு 

இன்னும் வீடு வந்து சேரலயே


அட மழை பெய்யுது

பூத காத்தும் வீசுது 

ஒலியும் ஒளியும் 

போட்டி போட்டுன்னு இடிக்குது.


நிலாவோ 

மேகத்துக்கு நடுவுல ஒளிஞ்சிக்கினு 

வரமாட்டேனு அடம்புடிக்குது.


காத்து கருப்பு அடிச்சிருக்குமோ

காட்டாறு வெள்ளதுல 

அடிச்சுட்டு போயிருப்பானோ 

இப்படி வெவரமொன்னும் அறியாம 

தாய் மனசு இங்க தவிக்குது.


புள்ளி மானை வேட்டையாட காத்திருக்கும் 

சிறுத்தை புலியைச் சிங்கம் போல 

வேட்டையாடி எம்புள்ள வாரயில 

பெத்த வயிறு எரியுது ஒத்த உசுரும் போகுது.


மானோட உயிர் காக்க 

தன்னோட உயிர பணயம் வச்ச 

என் மகன ஊரெல்லா புகழ்ந்து பேச 

நான் மட்டும் யேசுரனே 

இது தான் தாய் பாசமா!

பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்

Published in Nagore Puranam October month magazine 2025

Post a Comment

0 Comments