அன்வரின் துளிகள் - 3 | March 2024 | அன்வர் சாஹிப்


தோல்வியும் தோழனே

உன்னைத் தோற்கடிக்க யாரும் இல்லை உன்னைத் தவிர.

எரிச்சல் எதற்கு?

என்னைப் பார்த்து உன்னைப் பார்ப்பதில் எஞ்சுவது வெறும் எரிச்சலே.

நட்பிருக்க பயமேன்

தோள் கொடுப்பதல்ல சிறந்த நட்பு தோற்ற நம்பிக்கையை தட்டி எழுப்புவதே.

கல்லூரிகளின் கதி

எல்லாவற்றிலும் சிறந்த கல்லூரிகள் மறந்ததேதோ தங்கத்தமிழைத் தான்.

முயற்சிக்கு முற்றுப்புள்ளி

கனவுகள் மெய்ப்பட சிந்தித்தது தவறா?கலவையான நீட்டை கண்டித்தது தவறா?மங்கும் மனத்துடன் மருத்துவர் அனிதா.

உணர்வுக்குமுண்டு ஏற்றத்தாழ்வு

மகிழ்விக்க சிலரே இருக்க அழ வைக்க பலர் ஏனோ?

சுற்றும் சுற்றம்

சுயநலனுடன் சுழல்கின்றன சுற்றங்களும்.

- அன்வர் சாஹிப்

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments