பெண் | March 2024 | பூ. நல்லபெருமாள்

பிறப்பால் ஓர் பேரினம் கண்டோம்! அவள் பெண்ணண்றி வேரினம் காண்போம்!

சிறப்பால் தமிழ் சொல் எடுக்க கண்டோம்! அவள் சிலையோ மாமல்ல கலையோ காண்போம்!

மறத்தால் புலி விரட்டிடக் கண்டோம்! மானத்தால் புவி ஆண்டிட கண்டோம்!

ஆறுக்கெல்லாம் பெண்ணின் பெயரைக் கண்டோம்! கிளி பார்க்கெல்லாம் பெயர் வைத்திட கண்டோம்!

பெண்ணிற்கு சரி பாதி தந்தவனென்று- பழம் பெருமை பேசிக்கொண்டு அலைந்திடக் கண்டோம்!

ஒரு மண்ணுக்கும் கூட மதிக்காமல் இங்கு வாழ்ந்திடும் பல பேரை காண்போம்!

கள்ளிப் பால் ஊற்றி கொன்றிடக் கண்டோம்! வெறும் காமப் பொருளாக கண்டிடக் கண்டோம்!

எத்தனை எத்தனை துன்பம் தந்தோம் அவள் அத்தனையும் தாங்கும் தாயுள்ளம் கண்டோம்!

- பூ. நல்லபெருமாள்

Published in Nagore Puranam March month magazine 2024


Post a Comment

0 Comments