Nagore Puranam
மின்னுவதெல்லாம் பொன்னல்ல | March 2025 | கவிஞர் மீரான்தாசன்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல | March 2025 | கவிஞர் மீரான்தாசன்

 


முலாமிட்ட நகைதான் மின்னுது.

அசல் தங்கமெல்லாம் ஏன் மங்குது.

போலிகளைக் கொண்டாடப்படுவது இக்காலம்.

உண்மைகளைக் கொண்டாடப்போவது எக்காலம்.

புறக்கண்ணில் சில சமயம் பிழையான காட்சி.

அக கண்ணுக்கு புரிந்தால் அதுதான் மனசாட்சி.

உண்மையில்லாத அனைத்திற்கும் விரைவில் அழிவு என்னும் சாபம்.

உண்மையுள்ள அனைத்திற்கும் என்றாவது கிடைத்திடும் நிரந்தரலாபம்.

இருள் சூழ்ந்து இருந்தாலும் ஒரு ஒளி வந்தால் அது அத்தனையும் விலக்கும்.

உண்மையான ஒளி வந்தால் பொய் அனைத்தையும் விலக்கும்.

- கவிஞர் மீரான்தாசன்

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments