உலக மய உண்மைகள் | March 2024 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்



உலகமயம் ஆக்கலில் துவண்டு பிரண்டு 

உருண்டு விழுந்து மீண்டும் எழுதல் 

கலகம் இல்லாமல் கவனம் கவராமல்  

கண்டு காணாமல் நாளும் நடக்கிறது


இந்த வேக தடைகளை விரைந்து முந்தும் 

கட்டாயம் நாடுகள் தனித்து பந்தயத்தில் 

குதிக்காது ஒன்றை ஒன்று பக்கபலமாய் 

சார்ந்திருக்க சந்தர்ப்பம் தருகிறது


வல்லமை மிக்க வணிக நாடுகளின் 

வட்டி விகித அளவிற் கேற்ப

வளரும் நாடுகள் இசைந்து நடக்க

உலக நாணய மையம் கூறுகிறது


அதிக வட்டி உற்பத்தி செலவை

அதிகரிக்கும் அன்றாட பொருள்விலை உயரும் 

அதிகவிலை உயர்வால் உற்பத்தி நிறுவனங்கள் 

அதிக இலாபம் ஈட்டும் வாங்கும்


மக்களே வதைபடுவர் வங்கிகடன்

அட்டைகள் மக்களை மயக்கி மாறா

துயரத்தில் முக்கி மூழ்கடிக்கும் 

சிறுக கட்டி பெருக வாழ பழக வேண்டும்

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments