நம்மவர் & நமக்கானவர் | November 2025 | கவிஞர் தி. சுப்ரமணியன்


தென்றலாய் வந்துடுவேன். 

தெம்மாங்கு பாட்டாய் பறந்து வரேன் 

தெய்வீக திரு மகனார் திரு நபியை காண

தோழருக்குத் தோழராக தோழரோடு தோழராக. 

தொழுது வந்தாரே. 


தோல்விதனைக் காணாதவர். 

தேடி வந்தார் நமைக்காக்க.

தேங்கிய தண்ணீரிலும் 

முகம் பார்த்தார் 

நமை தேங்காமலே கரை சேர்த்தார். 


தேடி வந்தனர் வானவரும் 

தேவைகள் யாவும் தந்தனரே. 

தேம்பி திணறுது என் மனது. 

தேக்கம் தீர்த்தே அருள் வீரே.


தோழரின் தோளோடு வெற்றிதனைச்

சேர்த்து தந்தீரே. 

சோர்வடையா மனம் கொண்டு. 

சோதனையை வென்று வந்தீரே 

தோற்றம் காண்போம் 

அவர் நினைவால் பலர். 

தேடி வருவார் பல நினைவால். 


தேடிடும் நெஞ்சத்தில் சேர்ந்திடுவார். 

செந்தாமரையாய் நெஞ்சத்தில் பூத்திடுவார். 

செங்கோல் மன்னனாய் பழகிடுவாரே. 

சலாம் சொல்லி சந்திப்போம் அவர்

சாம்ராஜ்யத்தில் கலந்திடுவோமே.


- கவிஞர் தி. சுப்ரமணியன்

Published in Nagore Puranam November month magazine 2025

Post a Comment

0 Comments