மனித கடவுள் | December 2025 | கவிஞர் காஞ்சி கிருபா


1986 ஒன்பதாம் வகுப்பு படித்துக்‌ கொண்டு இருக்கிறேன்...

அன்று வியாழக்கிழமை...,

காலை அரிசி புட்டு, பத்தவே பத்தாது. அரை வயிற்று பசியோடு விடுதியில் இருந்து பள்ளிக்கு வரிசையாய்க் கிளம்பியாச்சி.

பள்ளி வந்தவுடன் பசி அதிகம் ஆக பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு கல்யாண மண்டபம்....

புத்தகப்பையை வகுப்பில் வைத்து விட்டு.... 

கீழே போடப் பட்டிருந்த முள் வேலியை லாவகமாக தாண்டி குதித்து.பள்ளி சீருடையுடன்.... 

காலை நேர கல்யாண பந்தியில் நான் உட்கார... நெஞ்செல்லாம் படபடக்க, பயம் ஒரு புறம், பசி ஒரு புறம் கலங்கிய கண்களோடு நான் உட்கார்ந்திருக்க ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்துடன் செல்ல செய்வதறியாது திகைத்து இன்னும் நான் பந்தியில்...இலை போட்டு, இனிப்பு வைத்து அந்த பொங்கல் போட வரும் நேரம் " டேய் யார்ரா நீ எங்கிருந்து வந்த ஸ்கூல் பையனா கட்டு அடிச்சுட்டு சாப்ட வந்திட்டீயா எந்திரிடா கழுதை எவ்வளவு திமிர் உனக்கு " அண்ணா பசிக்குது‌.. ரொம்ப பசிக்குது என் கண்கள் கலங்கின.

ஓங்கி ஓர் அடி என் தலையில் எந்திரிடா முதல்ல ராஸ்கல்" சட்டையைப் பிடித்து இழுக்க....." ஏய் யாருப்பா நீ.. பாவம் சின்ன பையன் பசியோட வந்திருக்கான் சாப்பிடட்டும்... பாவம்" அந்த அண்ணன் சொல்ல அமைதியானது மண்டபம்...பசியாற சாப்பிட்டு அந்த அண்ணனுக்கு நன்றி சொல்லி மீண்டும் முள் வேலி தாண்டி பள்ளிக்கு வந்து.... 

தாமதமாய் வந்ததற்கு கொஞ்ச நேரம் முட்டி போட்டு மறக்காமல் கால்சட்டை பாக்கெட்டில் இருந்த மஞ்சள் பழம் எடுத்து என் நண்பனுக்கு கொடுத்த போது ..... 

கடவுள் யார் மூலமாவது பசியாற்றுவார் என்ற மன நிறைவோடு கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.

பள்ளி : கார்லி மேல் நிலைப் பள்ளி, தாம்பரம்.

கல்யாண மண்டபம் : பாத்திமா அரங்கம்...

மேற்காணும் இந்த புகைப்படத்தில் பட்டன் இல்லாத சட்டை அணிந்திருப்பது மக்களின் கலைஞன் கா.

- கவிஞர் காஞ்சி கிருபா 

Published in Nagore Puranam December Month Magazine 2025


Post a Comment

0 Comments