நாகூர் கந்தூரி | December 2025 | கவிஞர் தி. சுப்ரமணியன்

 


கொடிகலின் ஊர்வலம் இது 

என் கோமானின் நகர்வலம்

ஆழி போல் அருள் மனம்

ஆதரிப்பார் அனுதினம்


சந்தனத்து வாசத்துடனும் 

சாம்பிராணி மனத்துடனும்

சலசலக்கும் சலங்கை ஒலியுடனும்

சான்றோர்களின் துவாக்களுடனும்


சுற்றி வருவார்கள் சுற்றத்தார்களே

நாடி வந்து பாரு இது நாகூரார் கூடு

நாகையிலே இருந்து கிளம்பி 

நாகூரை வலம் வரும் பாரு.


பூக்கள் மணம்வீச, புகழ் ஒளியும் கேட்க

பூரிப்பால் மக்கள் புன்னகைத்து 

தொடரும் கொடிகளின் ஊர்வலம் 

இது கோமனின் நகர்வலம்.


அலங்கார ஊர்வலம் அழகிய தோரணம்

அலங்கரிக்கும் நகர்வலம்

இது அன்பால் விளைந்த ஊர்வலம்

அலை ஓசை போல அவர் அருள் ஓசை

கேட்க அலையுதிந்த அன்பு மனம்.

- கவிஞர் தி. சுப்ரமணியன் 

Published in Nagore Puranam December Month Magazine 2025

Post a Comment

0 Comments