அத்தனை உறவுமுன் சொத்தினை நோக்கியே 

ஆண்டவன் கருணைதான் உண்மை- உளம் 

வித்தினைத் தர்மமாம் நிலத்தினில்போட்டால் 

உனக்குள் இமயமாம் நன்மை.


சித்தனைப்போல்மனம் 

சிந்தையில் இருந்தால் 

சிறுசிறு துன்பமும் தூள்தான்- பெரும்

சீர்மிகுவாழ்க்கை நேர்வந்து நிற்கும்

செகத்திலும் நற்பெயர் தேன்தான்.


எந்த நேரமும்சொர்க்கமே நோக்கம் 

இதற்கென உன்செயல் அமைக- இதன்

ஏற்றமாம் ஒழுக்கம் போற்றிட வேண்டும்

இம்மியும் விலகிடாதிருக்க.

*****************************************

விருப்பமும் வேலையும் 

ஒன்றாய் இணைந்தால்

வெற்றி விளைவுகள் உன்னதமே 

அதன் நிறைந்த பயனும் 

விரைந்தே வந்திடும் கண்ணெதிரே.


விரிந்த புகழும்

வருத்தமும் அசதியும் வரவிட்டாலே 

வாழ்நாள் அமையுமபெருஞ்சுமையே- இது 

வந்த பின்னலே விரட்டியடிப்பது 

வலைப்பது நாய்வால் எனும் கதையே.


தரித்திரம் வறுமை , தளராநோய்ச்சுமை

தன்னால் வந்திடும் சோம்பலினால்- இது

தன்னையும்வாட்டி குடும்பத்தும் நீட்டி

தானே பிடித்திடும் உறுதியினால்,

சரித்திரம்படைக்க நினைத்திடும் 

உளந்தான் மகிழ்ச்சி ஆர்வம் பெற்றோங்கும்

இதைத் தனித்த பற்றுடன் 

ஏற்றிடும்வாழ்வில் தனிப்புகழ்

இமயம் பற்றாகும்.

கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

Published in Nagore Puranam December Month Magazine 2025