வீதியெல்லாம் குப்பை சகிக்கல

வீடெல்லாம் இதப்பத்தி சிந்திக்கல

நாடெல்லாம் குப்பை மேடாச்சி நாளும்

நாமெல்லாம் சரியானா வரும் நல்ல நாளும்


ரோடெல்லாம் மாடுங்க திரியுது

போஸ்டர தின்னு தினம் கழியுது

தெருவெல்லாம் நாய்களா தெரியிது

கவனம் பிசகினா வந்து கடிக்கிது


கண்ட எடத்துல கழிவ கொட்டுதுங்க

டெங்கு வந்து உசுர காவு கேக்குதுங்க

புதுப்புது நோயெல்லாம் கதவ தட்டுதுங்க

சமூகம் பொதுப்படையா திட்டுதுங்க


கவனமற்ற தவறுகளால் காலத்தின் கண்ண கட்டுது

காகிதம் நெகிழின்னு பாக்காம நெதமும் கொளுத்துது

பொறுப்பில்லாத செயலால் பூமிக்கே மூச்சு முட்டுது


வீட்டுலேர்ந்து வருது பிரிக்காத குப்ப

இனிமேலும் செய்யாத இந்த தப்ப

நாமெல்லாரும் நோய்லேர்ந்து தப்ப

நாலுவக குப்பைய பிரிச்சு எப்ப வைப்ப


நிலத்தடி நீரைக் கெடுத்தது யாரு

குளமெல்லாம் குப்பமேடா கெடக்குது பாரு

பல்லுயிர் வாழ காரணம் நீரு

பணத்தால எல்லாமும் கிடைக்குமா கூறு


வார்த்தையில் இருக்கணும் வாய்மை

இல்லன்னா உள்ளம் ஆயிடும் நோய்மை

உழைப்பில் இருக்கணும் நேர்மை

உன்னைச் சுத்தி இருக்கணும் தூய்மை.

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam December Month Magazine 2025