இணையும் நாள் 

வந்துவிட்டால்

இன்னல் ஏது? இருள் ஏது?


நதிகள் போல்

சங்கமித்தால்

சண்டை ஏது ?சலனம் ஏது? 


தலைவர்கள் ஒன்றிணைந்தால்

தவிப்பேது? தனிப்பிரிவேது?


ஒரே கட்சி ஒரே கொடியானால்

ஒடுக்கும் நிலையேது? 

ஓலமிடும் குரலேது?


சாதிக் கட்சிகள்

சவமானால்

சாதி பிரிவேது? 

சாதிக் கொடுமை ஏது?


பல கட்சி தொண்டர்கள்

பாசத்தால் பிணைந்துவிட்டால்

பாவம் ஏது? பழி ஏது? 

கட்சி கொள்கைகள்

கைக் கோர்த்தால்

கலவர மேது? காழ்ப்புணர்ச்சி ஏது?


அரசியல் கட்சிகள் அன்பானால்

அடி தடியேது? அழுகைத்தான் ஏது?


போட்டியின்றி தலைவன் வந்தால்

தேர்தல் ஏது? நோதல் ஏது?


சமத்துவமாய் வாழ்ந்து விட்டால்

சட்டமன்றம் ஏது? சண்டைகள் ஏது? 


மனிதநேயம் பெருகிவிட்டால்

மறியல் ஏது? மழுப்பல் ஏது?


மக்களோடு மக்களாக

ஒன்று சேர்ந்தால் 

பிரிவேது ? பிணக்கம் ஏது?

பாரமும் பாடும் ஏது?ஏது?


அரசியல் கட்சிகள் சேரட்டும்

புதிய உலகம் மலரட்டும்.....


- கவிஞர் காஞ்சி கிருபா 

Published in Nagore Puranam January Month Magazine 2026