பழக்கம் திறந்திட ! & ஏற்று முன்னேறு ! | February 2026 | கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

 


பழக்கம் திறந்திட!

மக்களிடத்தில்

வேற்றுமை சிறிது

மனத்துள் நிறைந்து வெளிப்படும் - அது

அவர்களிடத்தினில் இருக்கும் பழக்கம்

என்பது வந்தே புலப்படும்.


சிறிய வேற்றுமை

பெரிதாய் மாறிடும்

எடுக்கிற எண்ண முடிவுகளால் அது

இருக்கும் நேர்மறை

உணர்வைப் பொருத்தே

என்றும் வெற்றிமுடிவுகளாய்.


நேர்மறை எதிர்மறை

என்பதைப் பொருத்தே நிகழ்த்தும்

செயல்களில் பழக்கம்வரும்- உன் 

கூடி இருந்தால் நிச்சயம் தோல்வி கூடவரும்.


நெஞ்சில் வஞ்சம்

ஊர்தரும் புகழும்

உன்னைச் சேர்வது உளத்து 

எண்ண ஏற்றம்தான்- அது உன்னை 

உயர்த்தும் மண்ணைவளர்க்கும்

உடனே காண்பாய் மாற்றம்தான்.

*****

ஏற்று முன்னேறு ! 

வாய்ப்பு வந்துக்

வழிநிலை இலையேல் தளராதே - நீ

கதவைத்தட்டும் வீட்டைக் கட்டிடு

கதவைப் பொறுத்திடு

வந்திடும்வாய்ப்பு தன்னாலே.


மேய்ப்புல் இல்லாத

கட்டாந்தரையினில்

மேய நினைக்குமா வெள்ளாடு- அது

புல்தரை தேடியே

செல்லும்என்பதே

புரிந்த உண்மைச் சொல்லேடு.


எட்டாக்கனிக்கு

எடுக்கும் முயற்சியை

இதயம் ஏற்றுக் கொள்ளாதே- உன்

எண்ணம் சீச்சி

இந்தப் பழத்தில் புளிப்பு என்பதை மறுக்காதே.


முட்டாள் என்றே

எவும் கூறினால் 

முழுமதி நாய்குரை எனக்கூறு- நீ 

முயற்சி ஒன்றையே தளர்ச்சி இன்றியே

முழுவதும் ஏற்று முன்னேறு. 


கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

Published in Nagore Puranam February month magazine 2026


Post a Comment

0 Comments