காலைப் பொழுது..
நடந்து சென்றிருக்கும் வேளையில்...
காற்றில் மெல்ல மிதந்து காகிதம் ஒன்று ஆனந்தின் காலைத் தொட்டது. யாராலும் தொடப்படாத ஒரு வெண்ணிறக் காகிதம் அது.
அவனுடைய கையை விட்டும் காற்றோடு வேகமாக அடித்து சென்றது. காகிதம் அவன் மனதை என்ன மாயம் செய்ததோ.
காகிதத்தை தொடர்ந்து ஓடினான்.
காகிதம் அவனை பூங்காவிற்கு அழைத்து சென்று மறைந்தது. அருகாமையில் மனம் திருடியவள் அமர்ந்திருந்தாள்.
ஹாய் ங்க. மெல்ல சிரித்தாள் அவள். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. தேங்ஸ் ங்க. உங்க பேர்? திஷா!
நான் ஆனந்த். நைஸ் நேம். மனதில் அவனுக்கு மகிழ்ச்சியின் உச்ச நிலை.
சட்டென மழை பிடிக்கத் தொடங்கியது. அவள் தன் குடையை விரித்தாள். நீங்க மழையில நனைஞ்சுட்டு இருக்க போறீங்களா? வாங்க. இல்ல பரவால்ல. பெரிய குடை தான் வாங்க என்றாள்.
"குவளை மலர்களைத் தோற்கடித்த மாணி கண்கள், போர் புரியும் கருவிழிகள், அளவான மூக்கு, நனைக்கப்படாத கோவைப் பழம் போன்ற உதடுகள் அவளது மொத்த அழகாக இருந்தது. வெண்ணிலவே பெண்ணிலவாக தரையில் உலவது போல் இருந்தாள்"
உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு தேங்ஸ் ங்க. மெல்ல பேசிக்கொண்டே அவளது கையைப் பிடித்தான். நாணத்தில் அவளது நகங்களும் சற்று சுருங்கின..
உலகமே இருவருக்கும் சுருங்கி விட்டதைப் போல நெருக்கம். கண்களையே உற்று நோக்கினான் ஆனந்த். மௌனக் கதைகள் விழி பாஷையில் பேசினர்.
ஆனந்த் டேய் எழுந்திரி காலேஜ்கு நேரமாச்சு பாரு, அவன் அம்மா எழுப்பினாள். பகல் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள். ஆனந்த் கதை என்னவென்று தெரியவில்லை...
தொடரும் ...
- ம. முஹம்மது உஸ்மான்
Published in Nagore Puranam March month magazine 2026

0 Comments