அன்வரின் துளிகள் - 5 | அன்வர் சாஹிப் | May 2024

 


விழி மறியல்

கடின சூழல்களில் கனிவுள்ள தாயை கடிந்துகொண்டதும் கண்களை மறிக்கிறது கண்ணீர்.

வாழ்வின் நுழைவாயில்

வாய்ப்பினைத் தொலைத்து வாழ்வினைத் தேடும் வாலிப மனம்.

புதிதாய் ஓர் உயிர்க்கொல்லி

கவனம் இருந்தும் கவசம் இருந்தும் கலகம் இழைத்த கரணம்.

முடியும் என்பார் முடிப்பார்

சிந்தையில் முடியும் எனில் விந்தையில் முடியும் வினை.

கறிக்குதவாத கல்வி

ஏட்டுச்சுரைக்காய்க்கு ஏற்ற உதாரணம் ஏடா கூட கல்வி.

பயணம் பயணமே

முந்திச்செல்ல இது பந்தயமல்ல பயணம்.

அன்பால் மயக்கும் மாதரசி

அம்மா எனும் அனைவர் மந்திரம்.

- அன்வர் சாஹிப் 

Published in Nagore Puranam May  month magazine 2024


Post a Comment

0 Comments