பெற்றோர் மூலம் உலக அறிவைப்பெற்றவன்.

பெரியவனாகி பெற்றோரையே அறிவிலி எனக் கேலிக்கிறான்.

இல்லாமையிலிருந்து படைத்த இறைவனிடமே

இது சரி அது தவறு என்று வாதிக்கிறான்.

சூரியனால் நேரத்தை அறிந்தவன்.

சூரியோதய நேரத்தையும் நிர்ணயிக்கின்றான்.

சூரியனின் நேரத்தைக் கடிகாரத்தில் காட்டினான்

சூட்டை சிலர் தன் தலைமீது ஏன் ஏற்றினான்.?

ஆரம்பநிலையை மறந்தவன் ஆணவம் கொள்கிறான்.

ஆதி அந்தம் உணர்ந்தவன் ஆணவத்தையே கொல்கிறான்.

-  கவிஞர் மீரான் தாசன்

Published in Nagore Puranam April Month Magazine 2024