புல்லாங்குழலின் காற்றில் மிதந்து வரும் கீதத்தில் கண்ணனை அறிவார்கள் சிலர், அதுபோல புலவரின் பாட்டில் கலந்து வரும் கருத்தினை கொண்டே கண்ணதாசன் என்று அறிவார்கள் பலர், சிறுகூடல்பட்டியில் பிறந்து சிங்கார சென்னையை அடைந்து தன்னுடைய கவியில் ஒட்டுமொத்த தமிழனையும் கட்டிவைத்தவர், கவிஞர் கண்ணதாசன்,
அவர் பாடல் ஆசிரியர் மட்டுமின்றி சிறந்த வசனகர்த்தா, எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், அரசியல்வாதி என அவர் பட்டியல் நீண்டு கொண்டே போகும்
பார்க்க தெரிந்தால் பாதை தெரியும்! பார்த்து நடந்தால் பயணம் தொடரும்! பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்! கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்! காட்சி கிடைத்தால் கவலை தீரும்! கவலை தீர்ந்தால் வாழலாம்!
இப்படி பல பாடல்களில் கருத்தினை தந்தவர் நம் கவிஞர் கண்ணதாசன். பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் பெருநாளை கொண்டாடும் விதத்தில் ஒரு பாடலை எழுதி இருப்பார். அது பின்வருமாறு:
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆடையின்றி பிறந்தோமே!
ஆசையின்றி பிறந்தோமா!
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ!
படைத்தவன் சேர்த்து தந்தான்!
வளத்தவன் பிரித்து வைத்தான்!
எடுத்தவன் மறைத்து கொண்டான்!
கொடுத்தவன் தெருவில் நின்றான்!
எடுத்தவனை கொடுக்க வைப்போம்!
கொடுத்தவனை எடுக்க வைப்போம்!
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்!
இனிவரும் மாதங்களிலும் நம் நாகூர்ப் புராணக் கருத்தில் கலந்து வருவார் கண்ணதாசன்.
- பூ. நல்லபெருமாள்

0 Comments