வயது முதிர்ந்து 

முதுகெழும்பு வளைந்து 

கூணி குருகி நிற்கும் நிலை 

அது தான் முதுமை...


நேரம் பல இருந்தும் 

பரிமாற துணையில்லா 

துக்கத்துடன் தூக்கம் அதிகரித்தால்

அது தான் முதுமை...


எழுந்து நிற்க, 

எகிறி குதிக்க 

திராணி இல்லாமல் திக்குமுக்காடும் 

அது தான் முதுமை...


வாச்சதும் போய் 

வந்ததும் காணாமல் போய் 

வறுமையில் வயிறு வாடும் 

அது தான் முதுமை...


நீக்கமற நினைவுகள் 

நீர்ததும்ப வலிகள் 

விழியோ துணை தேடும் 

அதுதான் முதுமை...


உண்ண உணவும் 

உடுத்த உடையும் 

இவையும் தனிமையும் இருந்தால் 

அது தான் முதுமை...


சாப்பிட வாயும் 

ருசிக்க சுவை புலனிருந்தும் 

நோய் அதனை தடுத்தால் 

அது தான் முதுமை...


இன்னும் எத்தனை 

இன்னல் கண்டு 

இதயம் நோகுமோ என்றிருந்தால் 

அது தான் முதுமை...


-  மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam April Month Magazine 2024