கடன்காரச் செல்லையா வெளிநாடுச் செல்லய்யா..
கோடிகளின் கேடியாம் கடன்காரச் செல்லையா,
அற்பன் எனக்கும் அந்த வானம் தான் எல்லையா.
மதுபான ஆலைகளில் நிர்வாணப் படங்களில் விடிகிறது
என் கிழக்கு அடேய் இதற்கெல்லாமா வழக்கு
மீன்கொத்தி இலச்சினை பீர்போத்தல் விற்பனை
உலகை ஆள கற்பனை அடடா
இதற்கா இத்தனை பிரச்சனை..
பணக்காரனாக ஏங்கினேன்
கடன் தான் வாங்கினேன்
வங்கியில் கடன் தான் வாங்கினேன்
பிறகுதான் வங்கியையே வாங்கினேன்
கடன்காரச் செல்லையா
எனக்கு அந்த வானம் தான் எல்லையா
எதுவும் போதாது
நான் அந்தக் கடவுள் தானென்று சொல்லையா.
- கவிஞர் சூ. சிவராமன்

0 Comments