Nagore Puranam
கவிஞர் மு.அ அபுல் அமீன் | கவிஞர் மீரான்தாசன் | April 2026

கவிஞர் மு.அ அபுல் அமீன் | கவிஞர் மீரான்தாசன் | April 2026

சான்றோர்கள் பாரம்பரியம் வழி வந்த உங்கள் பிறப்பு.

சமூகக் கூட்டத்திலும் மேடையிலும் அடைந்தீர்கள் தனிச் சிறப்பு.

கடந்த கால நாளிதழ் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் துருப்பு.

வருங்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை படகை இயக்கும் துடுப்பு

உங்கள் இனிய கட்டுரையும் கவிதைகளைப் படித்தால் அது இன்சுவை கரும்பு.

சில சமயங்களில் உங்கள் பேச்சில் கலந்திருக்கும் நாகூரின் குறும்பு.

தமிழ் உணர்வூட்டும் எங்கள் அபுல் அமீன் மாமாவின் உயர்ப்பண்பு.

மார்க்க அறிவிலும் நெறியிலும் தவறாது இறையன்பு.

அலையில்லா கடல் போல ஞான நிறைந்த சாந்தமே உங்கள் பண்பு .

தகவல்களைச் சேகரிப்பதில் கண்டோம் விந்தையான பண்பு.

தபால் துறையில் சீரிய பணி செய்தது முன்பு.

கல்வி துறைக்கும் நீங்கள் சேவை செய்தது அதற்குப் பின்பு.

மதப் பேதமின்றி நீங்கள் பாசத்துடன் பழகும் உங்கள் அன்பு.

அதனால் யார் மீதும் செலுத்தவில்லை வார்த்தையில் அம்பு.

ஒருநாள் வெளிவரும் அவர்கள் உயர்வு. அப்போது உலகே நீ நம்பு.

இறைவன் தர வேண்டும் உயர்ந்த சுவனத்தில் பங்கு.

உங்களில் இருந்தது ஈமான் இறையச்சத்தால் வந்த தெம்பு.

உங்கள் உடலை சுமந்து வந்துவிட்டார்கள், பிற்பகல் தொழுகைக்கு முன்பு.

இறை அழைப்பை ஏற்றுக் கொண்டது புனித ரமலானுக்குப் பின்பு.

- கவிஞர் மீரான்தாசன் (நாகூர் மு.அமீர் அலீ)

Post a Comment

0 Comments