Nagore Puranam
கண்ணணின் வரிகள் | அன்பில் கண்ணன் | February 2025

கண்ணணின் வரிகள் | அன்பில் கண்ணன் | February 2025



1. எது தன்மானம்

தன்னுடைய நேர்மையான நிலைபாட்டினை மறுத்து பேசுபவர்களையோ, உதாசீனப்படுத்தி பேசுபவர்களையோ எதிர்த்து பேசுவதற்கு பெயர்தான் தன்மானம்.

2. அளவோடு அளவலாவு

ஆசைக்கு அளவில்லை அன்புக்கு வயதில்லை நட்புக்கு ஜாதி மதம் ஏதுமில்லை எதிலும் நாம் அளவோடு இருந்தோமானால் அவதிப்படவும் தேவையில்லை, அவமானப்படவும் தேவையில்லை.

3. நம்பிக்கை

வாழ்க்கையை வெறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம் நாம் நம் மீது கொண்ட நம்பிக்கை தான்.

4. குணமாதல்

சில காயங்கள் மருந்தால் சரியாகும், சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

5. ஏற்க மறுக்கும் எதார்த்தம்

ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நிற்கலாம் ஆனால் ஒருவரைக் கூட எதிர்பார்த்து நிற்காதே.

6. எல்லோரிடமும்

எல்லோரிடத்திலும் உள்ள அன்பான விஷயங்களைக் கவனியுங்கள், அவர்களிடத்தில் உள்ள குறைகளைக் கவனிக்காதீர்கள்

7. எது வீரம்

பயமின்றி இருப்பதல்ல வீரம், பயத்தை எதிர்த்து போரிட்டு வாழ்வதுதான் வீரம்.

8. முடியாதது ஏதுமில்லை

மனச்சோர்வு அடையாத தளராத இதயம் உள்ளவனுக்கு முடியாக என்று எதுவும் இல்லை

- அன்பில் கண்ணன்

Post a Comment

0 Comments