நற்றமிழ் கவிஞரே ...
நாகூர் நினைந்து போற்றும்
நல்லிசைத் தென்றலே ...
அபுல் அமீன் அய்யா
மறைவு செய்தியால்
அசைவற்று போனது
எங்கள் உள்ளமும் உடலும் ...
எங்கள் விழிகளை ஈரமாக்கி
தூரமாக சென்றுவிட்டீர்
இஸ்லாமிய இலக்கியத்தின் இதயமே
உங்கள் எழுத்துகள்
இன்னும் தினமணியில்
மூச்சு விடுகின்றன ...
திராவிட கொடியில்
இளமையிலேயே
சுற்றிக்கொண்ட
இளந் தளிரே ...
உங்களின் எழுத்துக்கள்
எழுந்து நிற்கின்றன
அஞ்சல் அதிகாரிக்கு
அஞ்சலி செலுத்த
நாகூர் தமிழ் சங்கத்தின்
முத்தமிழும்
முகம் புதைத்து அழுகின்றன
நெறியாளரின்
மறைவு கண்டு
கௌதிய்யா
பள்ளி கரும்பலகைகள்
வெள்ளை எழுத்துகளை
அழித்துக் கொண்டு
கருப்பில் கலந்த கவலையோடு
கண்ணீர் வடிக்கின்றன
கழகத் தலைவர்
காலமானார் என்று...
நான் எழுதும்
நாகூர் புராண ஆசிரியரே
நேரில் வந்து பூ மாலை சார்த்த வில்லை
பாமாலை மட்டும்
அனுப்புகிறேன்
அஞ்சலில்...
- கவிஞர் காஞ்சி கிருபா

0 Comments