கடந்து விட்டதே காலம் என்ற கவலையைக் கைவிடு 

காலம் இனியும் இருக்கிறது என்ற எண்ணத்தில் கரைதொடு

இலக்கை எளிதில் எட்டுவது இங்கே எளிதல்ல

இருக்கிறது வெற்றியின் இலக்கு என்று முடிவெடு

தடைகள் வரும் தளர்ந்திடாது முயன்றிடு

முடியாது என்று முயலாதவர் சொல்லைத் தட்டிவிடு 

இலக்கை அடைந்திட இடைவிடாது முயற்சி செய் 

முடியாது என்பதை முடியும் என்று மாற்றம் தருவதே முயற்சி...

- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி