Nagore Puranam
ஆதி பராசக்தி & குற்றாலக் குறவஞ்சி | பூ நல்லபெருமாள் | January 2025

ஆதி பராசக்தி & குற்றாலக் குறவஞ்சி | பூ நல்லபெருமாள் | January 2025

ஆதி பராசக்தி என்னும் திரைப்படத்தில் அபிராமி பட்டர் அமாவாசை அன்று முழு நிலவு வரும் என்று மன்னரிடம் வாக்குவாதம் செய்வார். அதனால் கோபம் கொண்ட மன்னன் அவரை தீயில் தள்ளி கொன்று லிட ஆணை இடுவார். அப்பொழுது ஒரு பாடல் வரும் சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ! இல்லை எனக்கு இடர் வருமோ! பதில் சொல்லடி அபிராமி, அந்த பாடலின் கடைசி சரணத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் திருக்குற்றால குறவஞ்சியின் ஒரு பாடலை இணைத்து இருப்பார், அதில் கடைசி வரியை மட்டும் படத்தின் காட்சிக்கு யேற்றாற்போல் மாற்றி அமைத்திருப்பார்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம்செயம் என்றாட-இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட இரு

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட மலர்ப் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட!"

கவியரசு கண்ணதாசன் அவர்கள் மாற்றி அமைந்த வரிகள்: மலர்ப் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட!"

திருக் குற்றாலக் குறவஞ்சி பற்றி ஒரு சிறு தொகுப்பு:

தென்காசி மாவட்டம் வடகரைப் பகுதிச் சிற்றரசராக விளங்கிய சின்னமாஞ்சாத் தேவரது அவைப் புலவராகத் திகழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவர் அப்பகுதிச் சிற்றூரான மேலகரத்தில் வாழ்ந்து வந்தவர். அவர் அருகிலுள்ள குற்றால நாதர்மீது பாடியது திருக் குற்றாலக் குறவஞ்சி என்னும் இசை நாடகச் சிற்றிலக்கியம்

கதைச் சுருக்கம்:

திருக் குற்றால நாதர் வீதியுலா வருகின்றார். அப் பொழுது பந்தடித்துக் கொண்டிருந்த பேரழகி வசந்த சுந்தரி வெளியே வந்து அவரைத் தரிசித்துத் தொழுகின்ற பொழுது அவர் பேரழகால் ஈர்க் கப்பட்டு அவர்மீது மையல் கொள்கின்றாள். அவர்பால் தன் தோழியைத் தூதனுப்புகின்றாள். அப்பொழுது வீதியில் குறிசொல்லும் குறத்தி ஒருத்தி வருகின்றாள். அவளிடம் வசந்த சுந்தரி குறிகேட்க அவள் 'நீ குற்றால நாதர் மேல் மையல் கொண்டுள்ளாய். உன் எண்ணம் ஈடேறும்' என்று சொல்கின்றாள். அந்த நேரம் குறத்தி சிங்கியைத் தேடிவந்த சிங்கன் சிங்கியுடன் அளவளாவுகின்றான். பின்னர் அனை வரும் திருக்குற்றா நாதரைப் பாடிப் பரவுகின்றனர்.

- பூ நல்லபெருமாள்

Post a Comment

0 Comments