பிரெஞ்சு ஆட்சியில் காரைக்காலுக்கு தனி ஆளுநர் உண்டு. ஆளுநர் மாளிகைக்கு குவர்ணமால் என்று பெயர்.
மாளிகை இருந்த தெருவுக்கு குவர்ணமால் வீதி என்று பெயர் அந்த குவர்ணமாலே இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக உறைவிடமாக உள்ளது.
பிரெஞ்சு ஆளுநர்கள் அவ்வப்பொழுது மனைரச் சுற்றி வருவார்கள். கடற்கரை, பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவம் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நூல் நிலையம் ஆகிய அனைத்து அரசு சார்ந்த பொதுமக்கள் கூடும் இடங்களை பார்வையிடுவர்.
குறைகளை அறிந்து ஆணையிட்டு ஆவணச் செய்வார்கள் ஆணையிடுவதை குறித்துக் கொண்டு ஆணைப்படி நடப்பதை அடிக்கடி வந்து பார்வையிடுவர்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லனேல் மிக்கூறும் மன்னன் நிலம் " என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப குவர்ணமாலிலும் வரும் இடங்களிலும் ஆளுநரை மக்கள் நேருக்கு நேர் சந்தித்து குறைகளைச் சொல்லலாம். நிதானமாக கேட்டு நிறைவேற்றுவார் மக்கள் குறைகளை. ஒரு முறை ஒரு ஆளுநர் வீதிகளின் சுத்தம் பிற அமைப்புகள் சரியாக இருக்கிறதா? என்று பார்வையிட்டார்.
மேற்கே கைலாசநாதர் கோயில் கீழ் தெரு தெற்கே பெருமாள் கோயில் வீதி வடக்கே கைலாசநாதர் கோயில் வீதி கிழக்கே மாதா கோயில் வீதி என்ற இந்த நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு சிறிய தெரு அல்லது சந்து இருந்தது.
இரு புறமும் வடக்கிலும் தெற்கிலும் ஐந்து லீடுகள்.சிறிய சந்துகளாகயிருந்தாலும் ஒரு பெரிய வாரி சென்று வரும் அளவுக்கு அகல தெரு எல்லா கட்டிடங்களும் எல்லைக்குள் இருக்கும். எல்லையை மீறி எட்டி பார்க்காது.
இந்த குறிப்பிட்ட தெருவில் பெயர் பலகை இல்லை. ஆளுநர் வந்த அதிகாரிகளிடம் ஏன் பெயர் பலகை இல்லை ? என்று கேட்டார் அதிகாரிகள் அந்த தெருவுக்குப் பெயர் இல்லை என்று பெருமிதமாக கூறினர். உடனே ஆளுநர் பிரெஞ்சு மொழியில் Rue Dela Dela என்றார்.
உடன் சென்ற நம் ஊர் அதிகாரிகளான அறிவு கொழுந்துகள் அந்த ஆளுநர் பிரெஞ்சு மொழியில் பெயர் இல்லை என்று சொன்ன Rue Deta Dela என்று எழுதி தமிழில் பெயரில்லா முடுக்கு வீதி என்று பெயர் பலகை வைத்தனர்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments