Nagore Puranam
விமர்சனங்கள் | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி | January 2025

விமர்சனங்கள் | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி | January 2025



எல்லோருக்கும் கிடைத்திடும் இவ்வுலகில் தன் இனமே தாராளமாய் முன் மொழிந்திடும் விமர்சனங்கள்.

எனக்கு இங்கு இதுவரை கிடைத்ததில்லையே என்று ஏழைகளையும் ஏங்க விடாத விமர்சனங்கள்.

உண்மையான கடமையைச் செய்பவனையும் பக்திமானாகப் பார்க்கிறான் என்றே தீர்ப்பளிக்கும் விமர்சனங்கள்.

அக்கறையுடன் உறவுகளில் அன்புகாட்டுபவனுக்கு அகத்தில் வேஷம் புறத்தில் நேசம் என்றே அடையாளம் காட்டும் விமர்சனங்கள்.

தேவையை அறிந்து உதவிகளைச் செய்பவருக்கு கொடையாளியென ஊராரும் சொல்ல எண்ணுகிறான் என்றே விமர்சனங்கள்.

படித்ததற்கான வேலைக்காக காத்திருக்கும் இளைஞனுக்கு உழைக்காமல் ஊர்சுற்றும் ஊதாரி என்றே விமர்சனங்கள்.

விமர்சனங்கள் உன்னை இங்கே விட்டு வைக்காது அதைக்கொண்டு கவலைக்கொள்வது வாழ்க்கையில் இலக்கை எட்டவைக்காது.

விமர்சனங்களை கைவிடு விடாமுயற்சியை கையில் எடு உன் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே விமர்சனங்களாகட்டும்.

- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

Post a Comment

0 Comments