சந்தையிலே | இ. முகில் வேந்தன் | January 2025

தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது 

மதிய உணவுக்கு தயிர்ச்சோறு வைத்திருக்கிறாள் 

விதவிதமாய் பழங்கள் இருந்தும் 

அவள் சாப்பிடவில்லை.

சொத்தைகள் பழங்களில் மட்டுமல்ல; அவள் வாழ்க்கையிலும்தான்.

ஒலிபெருக்கிக் குரலிலே ஓயாமல் கத்துகிறாள் 

தன் வயிற்றை நிரப்ப காலைமுதலே கூவுகிறாள் 

பழக்காரி பட்டாளம் சந்தையிலே.

- இ. முகில் வேந்தன்

Published in Nagore Puranam January month magazine 2025

Post a Comment

0 Comments