எம்மை கருவில் சுமந்த தாயே எனக்கு உயிரை ஊட்டினாள்

எம்மை கல்வியில் சுமந்த நீயே உண்ரவை ஊடினாய்

பசுமை நிறைந்த புல்வேழிச் சோலையிலே புண்ணகையால் மலர்ந்திருந்தோம்

இயற்கை புயலாய் வாழ்வின் விதி நம்மை உதிரச் செய்தன

காமமில்லா காதலுடனும், கர்வமில்லா நட்புடனும் கல்லூரி இசைப்பயணம் நகர்ந்ததுவே

இன்று பாதையில்லா ஓசையில்லா இசைப்போல முடங்கியதே

தோழில் சுமந்த தந்தையின் தகவலும் சிதறியதே தோழனே உனது தோழமையில்

வேற்றுமையில் மதம் கொண்டு வந்தோம் மாணவன் என்ற மதம் வென்று செல்வோம்

என் இருதய துடிப்பில் ஓசையில் கேட்டிருப்பேன் உன் குரல் தோழனே

என் சிந்தனைத்துளிகள் பார்த்திருப்பேன் உன் முகம் தோழியே

இனி ஒரு முறை இவ்வாறு சங்கமிப்போமா, இணைப் பிரியா நட்பில் இணைந்திருப்போமா, இல்லையேல் நம் நினைவிலிருப்போம்

இனி தொலைவில் இருந்தாலும் தொலைப்பேசி தொடர்பில் இணைந்திருப்போம் தோழமையில்

நீங்காத உன் நினைவுகளோடும் சப்தமில்லா இசைக்கொண்ட கண்ணீருடனும் உன் தோழன்.

- கவிஞர் தமிழ் காதலன்